/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/54_36.jpg)
தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் ஜுனியர் எம்.ஜி.ஆர், கிரிஷா குரூப், ஆனந்த்பாபு, உள்ளிட்ட பலர் நடிப்பில் பெயரிடாத படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில் இயக்குநர் மோகன்.ஜி கிளாப் போர்டு அடித்து படத்தைத்தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மோகன் ஜி, அவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படம் பற்றி பேசினார்.
அவர் பேசுகையில், "விளம்பரம் எதுவும் செய்யாமல் பகாசுரன் ட்ரைலரை வெளியிட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்தது சந்தோஷமாக உள்ளது. இதற்கு முன்பாக விமர்சனம் செய்தவர்களும் இப்பொது ஃபோன் பண்ணிவாழ்த்துகிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களைத்தழுவி எடுக்கப்பட்டது. சேலத்தில் ஒரு கல்லூரியில் படித்த மாணவிக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் அடிப்படையில் நான் விசாரித்தபோது அதேபோல் திருச்சி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அதனால் பல சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகியிருக்கிறது.
ரொம்ப சென்சிட்டிவான கன்டன்ட். எழுதும்போதே தயக்கமாகத்தான் இருந்தது. உண்மையைச்சொல்வதற்கான வாய்ப்பை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தைரியமாக பண்ணிருக்கோம். படம் வெளியான பின்பு உங்களுக்கு புரியும். இந்த ட்ரைலரில் யாரையும் நேரடியாக தாக்கினதாக எனக்குத்தெரியவில்லை. உங்கள் பார்வையில் அப்படி தெரிகிறது என்றால் அதற்கு நான் பொறுப்பில்லை. எப்போதும் அந்த நோக்கத்துடன் படம் எடுப்பதில்லை. உண்மை சம்பவம் என்று சொல்லும்போது சில உண்மைகளைப் பேசித்தான் ஆகணும்.
இப்படத்தில் ஆபத்தான செயலிகள் மூலம் இளம் தலைமுறையினர் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் கதை. ஆபாச காட்சிகள் எதுவும் வைக்கவில்லை. என் படத்திற்கு முதல் நாள் பெண்கள் அதிகம் பார்க்கிறார்கள். அதனால் ட்ரைலரில் எந்த அளவு காட்சி இடம் பெற்றதோ, அதே அளவுதான் படத்திலும் இருக்கும். படம் வெளியான பிறகு அதை ஏன் வச்சிருக்கேன் என்பது புரியும்.
கொரானா சமயத்தில் இதுபோன்ற வழக்கில் கிட்டத்தட்ட 800 மாணவிகளை கைது செய்துள்ளனர். அனைவரையும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், ஒரு இடத்தில் இருக்க வைத்து விட்டு அனுப்பிவிட்டார்கள். இது ஊடகங்களில் கூட வெளிவரவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளை சினிமா மூலம் தெரிவிப்பது பெற்றவர்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும். அவர்களுடைய எமோஷனைத்தான் சினிமாவாக எடுக்க முடியும். வேறு என்ன நாம் செய்ய முடியும். சட்டம்தான் அவங்களை தண்டிக்கணும். " எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)